Tamil Websites

Gerry - My humble attempt to unite all tamils

| |

Twitter

Share/Save/Bookmark

YouTube

09 October 2009

news

தலைப்பு செய்தி >> உள்ளாட்சி இடைத்தேர்தல் பெரும்பான்மையான இடங்களை திமுக & காங். கூட்டணி கைப்பற்றியது

உள்ளாட்சி இடைத்தேர்தல் பெரும்பான்மையான இடங்களை திமுக & காங். கூட்டணி கைப்பற்றியது



பதிவு செய்த நாள் 09 october 2009

Tamil, Tamil News,Tamil News paper, Tamil Newspaper, Tamil daily news paper, Tamil daily newspaper, cinema



சென்னை:தமிழகம் முழுவதும் நேற்று முன்தினம் நடந்த உள்ளாட்சி இடைத்தேர்தலில் திமுக, காங்கிரஸ் கூட்டணி வேட்பாளர்கள் அபார வெற்றி பெற்றுள்ளனர். சென்னையில் ஆலந்தூர், பல்லாவரத்தில் திமுக வேட்பாளர்கள் வெற்றி பெற்றனர். தமிழகத்தில் ஊரக உள்ளாட்சிகளில் 506 பதவிகள், நகர்ப்புற உள்ளாட்சிகளில் 97 பதவிகள் என 603 இடங்களுக்கு தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் இடைத்தேர்தல் அறிவித்தது. இதில் 74 இடங்களில் ஒருவர்கூட வேட்புமனு தாக்கல் செய்யவில்லை. 280 இடங்களில் வேட்பாளர்கள் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டனர். மாவட்ட ஊராட்சி வார்டு கவுன்சிலர்-3, மாநகராட்சி கவுன்சிலர்-2, ஊராட்சி ஒன்றிய வார்டு கவுன்சிலர்-14, நகராட்சி கவுன்சிலர்-50, சிற்றூராட்சி வார்டு கவுன்சிலர்-121 இடங்கள் உள்பட ஊரக பகுதியில் 166 இடங்களுக்கும் நகர்ப்புறத்தில் 83 இடங்களுக்கும் நேற்று முன்தினம் தேர்தல் நடந்தது. சராசரியாக 69 சதவீத வாக்குகள் பதிவாயின.



வாக்கு எண்ணிக்கை இன்று நடந்தது. வாக்குப்பதிவுக்கு மெஷின்கள் பயன்படுத்தப்பட்ட இடங்களில் காலையிலேயே வெற்றி நிலவரம் தெரிந்தன. மற்ற இடங்களில் முடிவுகள் பிற்பகலில் வெளியாயின. சென்னை மற்றும் புறநகர் பகுதிகள்: ஆலந்தூர் நகர 18-வது வார்டு ஓட்டுகள் தேர்தல் அதிகாரி மனோகரன் தலைமையில் எண்ணப்பட்டன. மொத்தம் உள்ள 3,219 ஓட்டுகளில் பதிவானவை 1,324. பாஸ்கரன் (திமுக) 875, மூர்த்தி (அதிமுக) 434 வாக்குகள் பெற்றனர். திமுக வேட்பாளர் பாஸ்கரன் 441 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். திமுக சட்ட துறை செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, நகராட்சி தலைவர் ஆ.துரைவேலு, துணை தலைவர் என்.சந்திரன், திமுக செயலாளர் பி.குணா, பொதுக்குழு உறுப்பினர் இப்ராகிம் ஆகியோர் தலைமையில் ஊர்வலமாக சென்று தில்லை கங்கா நகரில் உள்ள அண்ணாசிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.



காட்டாங்கொளத்தூர் ஒன்றிய 15-வது வார்டில் மொத்த வாக்குகள் 4,671, பதிவானவை 2,752. கற்பகம் முனிராஜ் (திமுக) 1728, மாரிமுத்து (அதிமுக) 978, செல்லாதவை 46. கற்பகம் 750 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். திமுக ஒன்றிய செயலாளர் தண்டபாணி, மறைமலைநகர் நகர செயலாளர் சண்முகம் மற்றும் திமுக நிர்வாகிகள் மாலை அணிவித்தும், பட்டாசுகள் வெடித்தும் வாழ்த்து தெரிவித்தனர். பல்லாவரம் நகராட்சி 7-வது வார்டில் மொத்தம் 1,884 ஓட்டுக்களில் 1,513 ஓட்டுக்கள் பதிவாயின. திமுக சார்பில் போட்டியிட்ட சட்டக்கல்லூரி மாணவி என்.அமுதா 1,108 ஓட்டு வாங்கி வெற்றிப்பெற்றார். அதிமுக வேட்பாளர் சாந்தி 405 ஓட்டு பெற்றார். பீர்க்கங்கரணை பேரூராட்சி 8-வது வார்டு தேர்தலில் அதிமுக வேட்பாளர் சம்பத் 196 ஓட்டு வாங்கி வெற்றி பெற்றார்.



காங்கிரஸ் வேட்பாளர் சுப்பிரமணியன் 171 ஓட்டுகளும் தேமுதிக வேட்பாளர் லாவண்யா 168 ஓட்டுகளும் பெற்றனர். சித்தாலப்பாக்கம் ஊராட்சி 2-வது வார்டில் மொத்தம் உள்ள 3,456 வாக்குகளில் 1,963 பதிவானது. எழில்பாண்டியன் (திமுக) 1,393, சித்திரை வேலு (அதிமுக) 523 ஓட்டுகள் பெற்றனர். 870 வாக்கு வித்தியாசத்தில் எழில் பாண்டியன் வெற்றி பெற்றார். பூந்தமல்லி நகராட்சி 11-வது வார்டு இடைத்தேர்தலில் மகாலட்சுமி (திமுக) வெற்றி பெற்றார். 17-வது வார்ட்டில் சுயேச்சை வேட்பாளர் தாஜூதின் வென்றார். மாங்காடு பேரூராட்சி 13-வது வார்டில் திமுக வேட்பாளர் எம்.ஆர்.வெங்கடேசன் வெற்றி பெற்றார். ஊத்துக்கோட்டை எல்லாபுரம் ஒன்றியம் திருக்கனஞ்சேரி ஊராட்சி 2-வது வார்டில் சுயேச்சை வேட்பாளர் சுந்தரம் 130 ஓட்டு பெற்றார்.



கடிகாரம் சின்னத்தில் போட்டியிட்ட சுயேச்சை வேட்பாளர் தேவராஜ் 131 ஓட்டு பெற்றதால் ஒரு ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். சோலைமணி ஊராட்சி 2-வது வார்டில் சுயேச்சை வேட்பாளர் அமுதா 137 ஓட்டு வாங்கி வெற்றி பெற்றார். சோழவரம் ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட வைதீகமேடு 1-வது வார்டில் மொத்த வாக்குகள் 516. செல்வசேகரன் (திமுக) 335 எடுத்து வெற்றி பெற்றார். 2-வது வார்டில் மொத்த வாக்குகள் 400. மணிமாறன் (திமுக) 217 ஓட்டு வாங்கி வெற்றி பெற்றார். மற்ற மாவட்டங்கள் திருச்சி: மாநகராட்சி 44-வது வார்டு தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் ஹேமா 1,477 வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.



கோவை, திருப்பூர், ஈரோடு, நீலகிரி மாவட்டங்கள்: திருப்பூர் மாநகராட்சி 35-வது வார்டு, வீரப்பன் சத்திரம் நகராட்சி 16-வது வார்டு, சூரம்பட்டி நகராட்சி 3-வது வார்டு, ஊட்டி நகராட்சி 5-வது வார்டு, அவிநாசி பேரூராட்சி 14-வது வார்டு, மடத்துக்குளம் பேரூராட்சி 7-வது வார்டு, பெரிய கொடிவேரி பேரூராட்சி 4-வது வார்டு ஆகிய 7 இடங்களில் தேர்தல் நடந்தது. திருப்பூர் மாநகராட்சி வார்டில் அதிமுக வெற்றி பெற்றது. மற்ற 6 இடங்களிலும் திமுக வெற்றி பெற்றது. நெல்லை: தென்காசி நகராட்சி 16-வது வார்டு தேர்தலில் மனிதநேய மக்கள் கட்சி வேட்பாளர் பீ.முகமதுஅலி வெற்றி பெற்றார். குமரி மாவட்டம்: கப்பியறை பேரூராட்சி 14-வது வார்டில் திமுக வெற்றி பெற்றது. பொன்மனை பேரூராட்சியில் மார்க்சிஸ்ட் வெற்றி பெற்றது. ஆற்றூர் பேரூராட்சி 15-வது வார்டு, வேர்கிளம்பி 5-வது வார்டு ஆகியவற்றில் சுயேச்சைகள் வெற்றி பெற்றனர். மற்ற பகுதிகளிலும் திமுக, காங்கிரஸ் வேட்பாளர்கள் அதிகளவில் வெற்றி பெற்றுள்ளனர்.


http://www.dinakaran.com/slide.asp

28 September 2009

hi

http://i926.photobucket.com/albums/ad110/gherrard/Tamil-flag-3.gifhttp://i926.photobucket.com/albums/ad110/gherrard/Tamil-flag-3.gif

hi


About Me

My photo
All about money making tips, insurance knowledge, current affairs,
 
Tamilidam. Design by Wpthemedesigner. Converted To Blogger Template By Anshul Tested by Blogger Templates.